Powered by Blogger.

Shortcode

Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

க்ரீன் சூப்

எப்போதும் தக்காளி சூப் வெஜிடபிள் சூப் என்று செய்து போர் அடித்து விட்டதா ? இதோ ஒரு புதுவிதமான சத்தான சூப் ரெசிபி உங்களுக்காக.

அந்த சூப்பின் பெயர் க்ரீன் சூப். பச்சை பயறை வைத்து செய்யும் இந்த சூப் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று. தினமும் இந்த சூப்பை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்குமான ப்ரோடீன் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

முழு பச்சை பயறு -50 கி

மிளகு -5

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம்

புதினா - சிறிது

கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்

நெய் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 செய்முறை :

 பச்சை பயறை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு  நெய் விட்டு மிளகு, இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி விதை அனைத்தையும் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். 

இப்போது வதக்கிய பொருட்களை வேக வைத்த பயறுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

பயறை கரண்டியை பயன்படுத்தி நன்கு மசித்து விடவும். 

பரிமாறும் முன் புதினா இலையைச் சேர்க்கவும். சப்புக் கொட்டி சாப்பிட க்ரீன் சூப் ரெடி.


ஈசியான க்ரீன் சூப்


 

தேவையான பொருட்கள்

3/4 கப் உருளைக்கிழங்கு (3/4 பை 3/4 இன்ச் க்யூப்)

1 1/2 கப் காலிஃபிளவர் (150 கிராம்)

2 டீஸ்பூன் எண்ணெய்

1/2 தேக்கரண்டி சீரகம் அல்லது ஜீரா

1 கப் வெங்காயம் க்யூப்

1 பச்சை மிளகாய் 
1/8 தேக்கரண்டி மஞ்சள்

3/4 கப் தக்காளி க்யூப்

1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

8 முந்திரி அல்லது 2 முதல் 3 டீஸ்பூன் கிரீம்

1 1/4 தேக்கரண்டி கரம் மசாலா

1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்

3/4 முதல் 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

தேவைக்கேற்ப உப்பு

1 தேக்கரண்டி கசூரி மெதி அல்லது உலர்ந்த வெந்தய இலைகள்

செய்முறை:

 1. வெங்காயத்தை ஒரு பேஸ்ட் செய்து ஒதுக்கி வைக்கவும். மென்மையாகும்  வரை முந்திரி மற்றும் தக்காளியை அரைத்து ஒதுக்கி வைக்கவும்.

 2. நீங்கள் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவரை பொன்னிறமாகும் வரை எண்ணெயில் வறுக்கவும். 

 3. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி சிறிது சீரகத்தை வறுக்கவும். 2 பச்சை ஏலக்காய் மற்றும் 1 சிறிய பட்டை இலைகளையும் பயன்படுத்தலாம். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.

 4. அடுத்து வெங்காய விழுது சேர்க்கவும். லேசாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். தக்காளி முந்திரி பேஸ்ட் சேர்க்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை முற்றிலும் மறைந்து போகும் வரை வதக்கவும்.

 5. மிளகாய், கரம் மசாலா, கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். மசாலா வாணலியில் இருந்து இளக தொடங்கும் வரை வதக்கவும்.

 6. 3/4 கப் தண்ணீர் ஊற்றவும். கிளறி, கிரேவி சிறிது கெட்டியாகும் வரை சமைக்கவும்.

 7. காலிஃபிளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கவும். ஆலு கோபி சமைக்கப்படும் வரை கிளறி மூடி வைக்கவும். நொறுக்கப்பட்ட கசூரி மெதி, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். மூடி இறக்கி வைக்கவும்.

ஆலு கோபி மசாலா


வீட்டில் கேரட் இருந்தால் சுலபமான சத்தான ஒரு ஸ்வீட் செய்யலாம். இதை செய்வதற்கு என அதிகம் மெனக்கெட தேவை இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே குறுகிய நேரத்தில் செய்யலாம். பொரியலாக செய்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த கேரட் லட்டுவை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
கேரட் 2 கப்
சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன்(அதிக இனிப்பு சேர்ப்பவர்கள் 1/2 கப் சேர்க்கலாம்)
தேங்காய் 1 கப்
நெய் 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன்
உலர் திராட்சை 1/4 கப்
முந்திரி 50 கி

செய்முறை
1. கடாயில் சிறிது நெய் விட்டு சூடேறியதும் உலர் திராட்சை மற்றும் முந்திரியை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. அதே கடாயில் மேலும் சிறிது நெய் விட்டு துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
3. பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து அது உருகும் வரை  நன்கு கலக்கவும். 
3.ஒரு கப் துருவிய தேங்காயை இதவுடன் சேர்த்து வதக்கவும். பின் மூடி 5 நிமிடம் வேக விடவும். இடையில் ஒரு தடவை திறந்து வதக்கிக் விடவும். இது அடிபிடிக்காமல் இருக்க உதவும்.
4. ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை இவற்றை சேர்த்து மீண்டும் மூன்று நிமிடம் மூடி வேகவிடவும்.
5. சிறிது நெய் சேர்த்து இறக்கி விடவும்.
6. கை பொறுக்கும் சூட்டில் லட்டாக உருட்டினால் நமக்கு தேவையான கேரட் லட்டு தயார்!!!

ஈஸியான கேரட் லட்டு


ஐந்து நிமிடத்தில் அருமையான சட்னி.. ஆம் வெறும் ஐந்தே நிமிடத்தில் காரசாரமான சுவையான வெங்காய சட்னி..

அதுவும் மழைக் காலத்தில் இரவு நேரத்தில் இட்லி தோசைக்கு சரியான ஜோடி இந்த சட்னி தான். நீங்களும் இதை செய்து பாருங்கள்..

 தேவையான பொருட்கள்:
 பெரிய வெங்காயம்-2
 சின்ன வெங்காயம் -10
 காய்ந்த மிளகாய்-5
 புளி( சிறிய நெல்லிக்காய் அளவு)
 உப்பு தேவையான அளவு
 தாளிக்க:
 நல்லெண்ணெய்
 கடுகு 
கருவேப்பிலை

செய்முறை:
1. வெங்காயத்தை நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, உப்பு அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் சிறிது  நல்லெண்ணெய் விட்டு கடுகு போடவும் கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

சுவையான வெங்காய சட்னி ரெடி!!!!

குறிப்பு:
1. புளி மற்றும் காரம் அதிகம் வைத்துக் கொள்ளவும். இது வெங்காயத்தின் காரம் அதிகம் தெரியாமல் இருக்க உதவும்.
2. புளியை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைக்கும் போது சில சமயம் அரையாமல் சட்னியில்  அங்கங்கு புளி இருக்கும். இதை தவிர்க்க புளியை சிறிது தண்ணீர்(2 ஸ்பூன்) விட்டு ஊற வைத்து பின் அரைக்கவும்.
3. தாளிக்க நல்லெண்ணையை தாராளமாக உபயோகிக்கவும். இதனால் வெங்காயம் மற்றும் மிளகாய் இவற்றின் காரம் அடங்குவதுடன் அந்த எண்ணெயின் மணம் இன்னும் இரண்டு இட்லிகளை சேர்த்து உண்ண தூண்டும். 
4. கடுகு கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்த சட்னியை சேர்த்து வதக்கி செய்யும்பொழுது சட்னி இரண்டு மூன்று நாட்கள் கூட கேட்டுப் போகாமல் இருக்கும்.

பச்சை வெங்காய சட்னி (Raw onion chutney)