Powered by Blogger.

Shortcode

பண்ணை நிலத்துக்கு அடியில் இருந்த சங்கு குகை! 
வாழ்நாளில் ஒரு முறையாவது நம் வீட்டின் பின்புறத்திலோ நம் நிலத்தையோ தோண்டி இருப்போம். அது விளையாடுவதற்காகவோ சுத்தம் செய்வதற்காகவோ இருந்திருக்கலாம் அப்போது நமக்கு கிடைத்ததெல்லாம் வெறும் குப்பையும் மண்ணும் தான். ஆனால் 19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் விவசாய நிலத்தைத் தோண்டிய போது சுவாரஸ்யமான ஒன்றை கண்டுபிடித்தார். அந்த தொழிலாளி இங்கிலாந்தில் ஒரு பண்ணையில் வாய்க்கால் வெட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது மண்வெட்டி பூமியில் புதைந்தது. இந்த வினோதமான நிகழ்வை பலரிடம் கூறினார். இதை அறிந்த பள்ளி ஆசிரியர் ஜேசன் நியூலவ் துப்பறிய அந்த இடத்திற்கு வந்தார்.

அப்போது தான் அந்த பண்ணை நிலத்துக்கு அடியில் பெரிய வெற்றிடம் இருந்தது. அடியில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக தனது மகன் ஜோஷுவாவை கயிற்றைக் கட்டிக் கீழே இறக்கினார். அச்சிறுவன் திரும்பி வந்தவுடன் கோவிலைப் போன்ற குகையைப் பற்றி விரிவாக விவரித்தான். அந்த குகை முழுக்க முழுக்க கடல் சங்குகளால் ஆனது எனக் குறிப்பிட்டான். ஆசிரியர் நியூலவ் இந்த குகை மிகவும் சிறப்புவாய்ந்ததாக உணர்ந்தார். அதனால் அந்த குகையை சுற்றுலா பயணிகளுக்கான ஒரு அம்சமாக மாற்ற விழைந்தார்.

விரைவில் சங்கு குகை வெளி உலகத்திற்கு 1838 ல் வந்தது. இன்றளவிலும் சங்கு குகை மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாக இங்கிலாந்தில் உள்ளது. இந்த குகை 104 அடி நீளம் கொண்ட 4.6 மில்லியன் சங்குகளால் ஆனது.
இதன் மேற்கூரை, சுவர் என் மொத்தமாக 2000 சதுர அடி சங்குகளால் மூடப் பட்டுள்ளது. அனைத்து சங்குகளும் மிக அழகான நேர்த்தியான விரிவான வேலைப்பாட்டுடன் அமைக்கப் பட்டிருக்கிறது. 2008 ல் மறுசீரமைப்புக் குழுவினர் இந்த அதிசய குகையைப் பராமரித்துப் பாதுகாக்க Shell Grotto என்ற அமைப்பை உருவாக்கியது. இந்நாள் வரையிலும் இந்த அற்புதமான சங்கு குகையை எப்போது, யார் உருவாக்கினார்கள் என்ற தகவல்கள் தெரியவில்லை. மக்களில் சிலர் இந்த குகையை கோவில் என்று நம்புகிறார்கள், சிலர் இதை ரகசிய சந்திப்புகள் நடைபெறும் இடம் என்கிறார்கள்.

சங்கு குகை

No comments:

Post a Comment