ஐந்து நிமிடத்தில் அருமையான சட்னி.. ஆம் வெறும் ஐந்தே நிமிடத்தில் காரசாரமான சுவையான வெங்காய சட்னி..அதுவும் மழைக் காலத்தில் இரவு நேரத்தில் இட்லி தோசைக்கு சரியான ஜோடி இந்த சட்னி தான். நீங்களும் இதை செய்து பாருங்கள்.. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்-2 சின்ன வெங்காயம் -10 காய்ந்த மிளகாய்-5 புளி( சிறிய நெல்லிக்காய் அளவு) உப்பு தேவையான அளவு தாளிக்க: நல்லெண்ணெய் கடுகு கருவேப்பிலை
செய்முறை:
1. வெங்காயத்தை நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, உப்பு அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு போடவும் கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
சுவையான வெங்காய சட்னி ரெடி!!!!
குறிப்பு:
1. புளி மற்றும் காரம் அதிகம் வைத்துக் கொள்ளவும். இது வெங்காயத்தின் காரம் அதிகம் தெரியாமல் இருக்க உதவும்.
2. புளியை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைக்கும் போது சில சமயம் அரையாமல் சட்னியில் அங்கங்கு புளி இருக்கும். இதை தவிர்க்க புளியை சிறிது தண்ணீர்(2 ஸ்பூன்) விட்டு ஊற வைத்து பின் அரைக்கவும்.
3. தாளிக்க நல்லெண்ணையை தாராளமாக உபயோகிக்கவும். இதனால் வெங்காயம் மற்றும் மிளகாய் இவற்றின் காரம் அடங்குவதுடன் அந்த எண்ணெயின் மணம் இன்னும் இரண்டு இட்லிகளை சேர்த்து உண்ண தூண்டும்.
4. கடுகு கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்த சட்னியை சேர்த்து வதக்கி செய்யும்பொழுது சட்னி இரண்டு மூன்று நாட்கள் கூட கேட்டுப் போகாமல் இருக்கும்.

No comments:
Post a Comment