உக்ரைனின் மிகப்பெரும் பணக்கார தொழிலதிபர் ஒருவர் அவரது மனைவியுடன் தெற்கு நகரமான மைகோலைவ் இல் ரஷ்ய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 74 வயதான Oleksiy Vadatursky, மற்றும் அவரது மனைவி Raisa அவர்களது வீட்டில் இருந்த போது ஏவுகணை தாக்கியதில் உயிர் இழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். திரு Vadatursky க்குச் சொந்தமான நிபுலன் நிறுவனம் , தானிய ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது. "ஹீரோ ஆஃப் உக்ரைன்" விருதையும் இவர் பெற்றிருந்தார். Vadatursky இன் மரணம் மிகப்பெரிய இழப்பு என உக்ரைன் அதிபர் வ்லோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மைகோலைவ்(Mykolaiv) மேயர் Oleksandr Senkevych கூறியதாவது, இது அநேகமாக இதுவரை இந்நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய மிகப் பெரிய குண்டுவீச்சு என்று கூறினார். ஒரு ஹோட்டல், ஒரு விளையாட்டு வளாகம், இரண்டு பள்ளிகள், ஒரு சேவை நிலையம் மற்றும் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. கருங்கடலில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகமான ஒடேசாவின் முக்கிய பாதையில் மைக்கோலேவ் அமைந்துள்ளது. மேலும் பிப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்தே இந்நகரம் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அலுவலகத்தின் ஆலோசகர், ரஷ்யா வேண்டுமென்றே தொழிலதிபரை குறிவைத்ததாக தான் நம்புவதாகக் கூறினார். ஏவுகணைகளில் ஒன்று தொழிலதிபரின் படுக்கையறையைத் தாக்கியதாக மைக்கைலோ போடோலியாக் கூறினார், இதனால் "சந்தேகத்திற்கு இடமில்லாமல் ரஷ்யா திட்டமிட்டே தாக்கியதாகக் கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.
தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக நிபுலன் நிறுவனம் பல சேமிப்பு வசதிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவை கோதுமை மற்றும் பிற தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக உள்ளன. மேலும் போரினால் ஏற்பட்ட ஏற்றுமதியின் இடையூறு உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் இரு நாடுகளும் கடந்த வாரம் துருக்கியில் ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மறுநாள் ஒடேசா துறைமுகத்தில் நடந்த ரஷ்ய தாக்குதலால் ஒப்பந்தம் கிட்டத்தட்ட தடம் புரண்டது.
உக்ரேனிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பு சோதனைகளால் மேலும் தாமதமானது. ஆனால் தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் கப்பல் திங்கள்கிழமை காலை ஒடேசாவிலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் எவ்வளவு தானியங்கள் சிக்கியுள்ளன?
No comments:
Post a Comment