Powered by Blogger.

Shortcode

க்ரீன் சூப்

எப்போதும் தக்காளி சூப் வெஜிடபிள் சூப் என்று செய்து போர் அடித்து விட்டதா ? இதோ ஒரு புதுவிதமான சத்தான சூப் ரெசிபி உங்களுக்காக.

அந்த சூப்பின் பெயர் க்ரீன் சூப். பச்சை பயறை வைத்து செய்யும் இந்த சூப் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று. தினமும் இந்த சூப்பை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவருக்குமான ப்ரோடீன் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

முழு பச்சை பயறு -50 கி

மிளகு -5

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம்

புதினா - சிறிது

கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்

நெய் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 செய்முறை :

 பச்சை பயறை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு  நெய் விட்டு மிளகு, இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி விதை அனைத்தையும் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்

இப்போது வதக்கிய பொருட்களை வேக வைத்த பயறுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

பயறை கரண்டியை பயன்படுத்தி நன்கு மசித்து விடவும்

பரிமாறும் முன் புதினா இலையைச் சேர்க்கவும். சப்புக் கொட்டி சாப்பிட க்ரீன் சூப் ரெடி.

ஈசியான க்ரீன் சூப்

No comments:

Post a Comment