Powered by Blogger.

Shortcode

 Investigational PrEP Injection Every Two Months Beats Daily PrEP: Study

பூஸ்டர் டோஸ் என்றால் என்ன?யாருக்கெல்லாம் பூஸ்டர் டோஸ் தேவை?
பூஸ்டர் டோஸை எப்போது எடுத்துக் கொள்ளலாம்? இவ்வாறான கேள்விகளுக்கான விடையை இங்கு காண்போம்.

COVID-19 பூஸ்டர் டோஸ் போடுவதை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. 
யாரெல்லாம் இந்த பூஸ்டர் டோசை எடுத்துக்கொள்ள வேண்டும். இது எவ்வாறு COVID வகை புதிய வைரஸ்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

1. பூஸ்டர் டோஸ் என்றால் என்ன?

நாம் இதற்கு முன் போட்டுக்கொண்ட COVID-19 தடுப்பூசி நாள்பட நாள்பட அதன் வீரியத்தை இழக்கும் தன்மை கொண்டது. அந்த வீரியத்தை ஊக்குவிக்கும் பணியையே இந்த பூஸ்டர் டோஸ் செய்கிறது.
சற்று விரிவாக சொல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி என்பது இறந்த அல்லது வீரியம் இல்லாத வைரஸை உடலில் செலுத்துவதே.  அவ்வாறு செலுத்தும் போது  நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த வைரஸை எதிர்த்துப் போராடி ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த ஆன்டிபாடிகள் இதன்பின் வரும் கோவிட் வைரஸ் உடன் போராடி அதன் தாக்கத்தை குறைக்கிறது. இதனாலேயே தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் இறப்பு விகிதம் குறைவாகக் காணப்படுகிறது. 

2. பூஸ்டர் டோஸ் எப்போது எடுத்துக்கொள்ளலாம் ?

தடுப்பூசியின் வீரியம் 3 முதல் 6 மாதங்கள் வரையே இருக்கும். 
இதனாலேயே முதல் தடுப்பூசி முடிந்த மூன்று மாதங்களில் இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இரண்டாவது தடுப்பூசி செலுத்திய பிறகு அதன் வீரியமும் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை தான் இருக்கும். இதனால் தான் தற்பொழுது பூஸ்டர் டோஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. பூஸ்டர் டோஸை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் ?
     
தடுப்பூசியைப் போலவே பூஸ்டர் டோசிலும் ஆறுமாதத்திற்கு தான் அதன் வீரியம் இருக்கும். அதன் பிறகும் நாம் நம்மை  தற்காத்துக் கொள்ள வேண்டுமெனில் அடுத்தடுத்த பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய அரசால் இப்பொழுது முன் களப்பணியாளர்கள் மற்றும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே முதல் பூஸ்டர் டோஸ் முன்பதிவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. 

*இது பொதுவான  தகவல் மட்டுமே. மருத்தவ ஆலோசனை அல்ல.*

பூஸ்டர் டோஸ் பற்றிய சில தகவல்கள்

No comments:

Post a Comment