Powered by Blogger.

Shortcode

நயாகரா அருவி இயற்கையின் சக்தியை எடுத்துக் காட்டக்கூடிய மிகப் பெரிய அதிசயம் என நமக்குத் தெரியும்.

இது வட அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மற்றும் பிரபலமான அருவி. இந்த அருவியின் பிரம்மாண்டத்தைக் காண ஒவ்வொரு வருடமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். காண்பதோடு மட்டுமின்றி நினைவுகூறத் தக்க வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். ஞாபகார்த்தமாக புகைப்படங்களையும் எடுத்து செல்கின்றனர். இது அனைத்தும் நாம் அறிந்ததே.

இந்த அருவியைப் பற்றி மக்கள் அறியாத ஒரு தகவலும் உள்ளது. நயாகரா அருவியை நிறுத்தி விட முடியும் தெரியுமா உங்களுக்கு?. ஒரு முறை  இது நடந்தும் உள்ளது.

இப்போது நாம் பார்ப்பது வழக்கமாக காணும்  நயாகரா அருவி. ஆர்ப்பரித்துக் கொட்டும் போது மூடு பனியும் வானவில்லும்  தோன்றும் காட்சி. 

1969 ல் கனடாவுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் பொறியாளர் படையைக் கொண்டு தற்காலிக அணை கட்ட 28000 டன் பாறைகளை நீரோட்டத்திற்கு எதிராகக் கொட்டினார்.

இயற்கையான பாறைச் சரிவுகளால் அமெரிக்க அருவிகளின் அடியில் பாறை சிதறல்களின் குவியல் இருக்கும். 

பொறியாளர்கள் இந்தப் பாறைக் குவியலால் ஏதேனும் ஆபத்து உள்ளதா? இதை அகற்ற முடியுமா? என அறிய எண்ணினர்.

அவர்கள் பல இடங்களில் அறிவியல் கருவிகளை வைத்து பாறைகளின் நகர்வைக் கண்காணித்தனர். இறுதியில் பாறைக் குவியலை அப்படியே விட்டு விடலாம் என்ற முடிவை எட்டினர்.

அந்த அணையை அகற்றினர். அதிலிருந்து அருவியானது தொடர்ந்து  பாய்ந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் நீரில்லா நயாகராவை திரும்பவும் பார்க்கலாம். ஏனெனில் அருவியின் மீது இயங்கும் இரு பாலங்களின் பழுதை நீக்க வேண்டியுள்ளது.

அறிவியல் மிகவும் ஆச்சரியமானது. ஆனால் இயற்கையின் தலைசிறந்த படைப்பான நயாகரா அருவிக்கு எந்த சேதத்தையும் விளைவிக்காமல் அறிவியல் பயன்பட்டால் அதுவே அனைவருக்கும் மகிழ்ச்சி. 

நயாகரா அருவியை நிறுத்த முடியும் தெரியுமா?

No comments:

Post a Comment