ரோசாலியா லம்போர்டோ
1920 ல் ரோசாலியா லம்போர்டோ நிமோனியாவால் இறந்த போது அவளின் வயது இரண்டு. தனது அன்பு மகளின் அகால மரணத்தால் மனமுடைந்த ரோசாலியாவின் தந்தை உடலை பதப்படுத்தும் நிபுணரான ஆல்ஃபிரேடோ சலாஃபியாவை அணுகி ரோசாலியாவின் உடலைப் பதப்படுத்திப் பாதுக்காக்க வேண்டினார்.
ஆல்ஃபிரேடோ தன் திறமையால் ரோசாலியோ இறந்து நூறு ஆண்டுகள் கடந்தும் கண்ணாடிப் பேழைக்குள் உண்மையாகவே தூங்கிக் கொண்டிருப்பது போல் தத்ரூபமாகப் பதப்படுத்தினார். அவளது கன்னம் இப்போதும் புடைத்தே இருக்கிறது. பொன்னிற முடியானது நெற்றியில் தவழ்ந்தும் பட்டு துணியால் கட்டப்பட்டும் இருந்தது. எக்ஸ் கதிர்கள் செலுத்தி சோதித்ததில் உள்ளுறுப்புகள் கூட இன்னும் கெடாமல் உள்ளது.
ரோசாலியா "தூங்கும் அழகு" என்றே செல்லமாக அழைக்கப்படுகிறாள் அந்த அளவுக்கு ஆல்ஃபிரேடோ அவளை தத்ரூபமாக பதப்படுத்தி உள்ளார். ரோசாலியா லம்போர்டோ உலகின் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட மம்மிகளில் ஒன்றாக பெருமை பெற்றுள்ளது.
அச்சிறுமி கண் சிமிட்டுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அவளது கண் இமைகள் மூடித் திறப்பதை குறுகிய இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் காணலாம்.
அவளது நீல நிற கண்கள் மற்ற உடல் பாகங்களைப் போல கெடாமல் கல்லறையின் ஒளி வெளிச்சத்தில் மினுமினுப்புடன் இருக்கிறது. கல்லறையின் உள்ளே உள்ள வெப்பநிலை மாற்றம் தான் அவளது கண் இமைகள் சுருங்கவும் விரியவும் செய்து கண் இமைப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.
கல்லறையின் பொறுப்பாளர் பியாம்பினோ மஸ்கலி இதனை ஒளி மாயை என்றும் ஜன்னலின் ஒளி அவள் மீது விழும் கோணத்தால் தான் கண் சிமிட்டுவதைப் போல் தோன்றுகிறது, ஒளி விழும் திசை மாறிக்கொண்டே இருப்பதால் ஒருநாளில் பலமுறை கண்கள் மூடுவதும் திறப்பதும் நடக்கிறது என்றும் கூறுகிறார்.
2009 ம் ஆண்டு தொழிலாளர்கள் ரோசாலியாவின் சவப்பெட்டியை நகர்த்திய போது அவளின் கண் இமைகளை நன்றாகக் காண முடிந்தது , அப்போது தான் இந்த மாயையைக் கண்டறிந்தேன் என்று மஸ்கலி தெரிவித்தார். மேலும் அவரது கண்டுபிடிப்பு என்னவென்றால் குறைகூற முடியாத அளவு உண்மைத் தோற்றத்தைப் போலவே பதப்படுத்திய ஆலஃபிரேடோவின் ரகசிய சூத்திரம் தான் அது.
ஆலஃபிரேடோ ரோசாலியாவை பதப்படுத்திய ரகசிய முறையை ஒரு ஆவணத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.
உள்ளுறுப்புகளை அகற்றி அந்த வெற்றிடத்தில் உப்பை நிரப்பி வழக்கமாக பதப்படுத்தும் முறைபோல இல்லாமல் ஆல்ஃபிரேடோ ஃபாரஂமலினஂ, ஜிஙஂகஂ உபஂபு, ஆலஂகஹாலஂ, சாலிசிலிக் அமிலம், கிளிசரின் கலந்த கலவையை சிறு துளை மூலமாக செலுத்தி உள்ளார். இந்த கலவையில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஃபாரஂமலினஂ பாக்டீரியாவைக் கொல்கிறது, கிளிசரின் வறட்சியைத் தடுக்கிறது, சாலிசிலிக் அமிலம் பூஞ்சைத் தொற்றை அழிக்க வல்லது, முக்கியமான பொருள் ஜிங்க் இது உடலைக் கடினத் தன்மையுடன் வைக்கவும் கன்னம் மூக்கு போன்றவை குழியாமல் இருக்கவும் உதவுகிறது.
இந்த "தூங்கும் அழகு" எட்டாயிரம் மம்மிக்களில் ஒன்றாக இத்தாலியின் கப்புச்சின் கல்லறையில் உள்ளது. இந்த கல்லறைக்கு வந்த இறுதி மம்மியும் இதுவே ஆகும்.

No comments:
Post a Comment