Powered by Blogger.

Shortcode

கண்ணிவெடிகள் உலகின் பல சிறுவர்கள் உயிரிழக்கவும் கை கால்களை இழந்து ஊனமடையவும் முக்கியமான ஒரு காரணமாக இருந்து வருகிறது. முன்பு போராட்டக்குழுக்கள் தங்கள் பாதுகாப்பிற்க்காக புதைத்த கண்ணிவெடிகள் இன்றும் அகற்றுவதில் பெரும் சவாலாக இருந்து வருகிறது. புதைத்தவர்களுக்கே எங்கு புதைத்தோம் என்று மறந்துபோவதும் அல்லது சிறிது ஆழத்தில் புதைந்து போவதும் இவைகளை கண்டு பிடிப்பதில் பெரும் சவாலாக இருக்கிறது. 

ஆப்பிரிக்காவில் வாழும் எலிகள் தங்கள் உடல் எடை மிகவும் குறைவாக இருப்பதாலும் மோப்ப சக்தி நிறைய இருப்பதாலும் கண்ணிவெடிகளை கண்டறிய பழக்கப்படுத்தப்பட்டு பெரும் வெற்றியும் பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு எலியான "மகாவா"விற்கு இங்கிலாந்தில் முதன்முறையாக  தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து பல உயிர்களை காப்பாற்றியதற்காக மகாவா என்னும் எலிக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு எலிக்கு பதக்கம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். மகாவா இதுவரை 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை ஆராய்ந்து 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

எலிக்கு தங்கப்பதக்கம்

No comments:

Post a Comment