சில நாட்களுக்கு முன்பு 200 வெற்றியாளர்களை பேட்டி கண்டதில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி உங்கள் வெற்றியின் முக்கியமான ஒரேயொரு ரகசியம் என்ன என்பதே. இந்த 200 பெயரில் 7 கோடீசுவரர்கள் 16 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்கள் இருவது முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் 100க்கு மேற்பட்ட தலைசிறந்த தொழிலதிபர்களும் அடங்குவர். இவற்றில் இருந்து நமக்கு கிடைக்கும் முக்கிய படிப்பினையை காண்போம்.
நிமிடங்களை வசப்படுத்துங்கள்
சாதாரண மக்கள் தங்கள் நேரத்தை அரை அல்லது முழு மணிநேரங்களாகவே கணக்கிடுவர். ஆனால் வெற்றியாளர்கள் அந்த நாளுக்குரிய 1440 நிமிடங்களையும் விட விலையுயர்ந்தது ஒன்றுமில்லை என்று அறிந்திருக்கின்றனர். பணத்தை இழக்கலாம் பிறகு சம்பாதித்தும் விடலாம் ஆனால் நேரம் போனால் திரும்பாது. எனவேதான் நம் முன்னோர்கள் நேரம் பொன்போன்றது என்றனர். சானொன் மில்லர் என்னும் ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர் தான் தனது பயிற்சியை நிமிடம் நிமிடமாக கணக்கிடுவேன் என்று கூறுகிறார். எனவே நிமிடங்களில் கவனம் செலுத்துங்கள்.
ஒன்றில் கவனம் செலுத்துங்கள்
மிகவும் முக்கியமான செயல் என்று ஒன்றை ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுத்து எந்த கவனசிதைவுகளும் இன்றி அந்த நாளின் தொடக்க இரண்டு மணிநேரத்தை அதற்க்கு செலவிடுங்கள். நீங்கள் அடையவேண்டிய லட்சியத்தினை முடிவு செய்யும் பிரதான செயல் எது என்று அடையாளம் கண்டு அதிலேயே கருத்தாக இருங்கள்.
பகிர்ந்தளியுங்கள்
வெற்றியாளர்களின் முக்கியமான மற்றோரு ரகசியம் இந்த வேலையை நான் எவ்வாறு செய்யமுடியும் என்பது அல்ல. இந்த வேலை எவ்வாறு முடிக்கப்படவேண்டும் என்பதே ஆகும். அதாவது நமது முக்கியத்துவத்தை ஓரம் கட்டிவிட்டு வேலை எவ்வாறு யார் செய்தல் நலம் என்று ஆராய்ந்து அவரிடம் ஒப்படையுங்கள். அவரும் மகிழ்ச்சியுடன் செய்வார், வேலையும் சிறப்பாக முடிந்து உங்கள் பாரமும் குறையும்.
திட்டமிடப்பட்ட காலை
எவ்வாறு நமது நாளை நாம் தொடங்குகிறோம் என்பதை பொறுத்தே எவ்வாறு அந்த நாள் முடியும் என்பது அமைகிறது. எனவே தீர்க்கமான காலை அட்டவணை மிகவும் முக்கியமானதாகும். இதை மோர்னிங் ரிச்சுவல் - அதாவது காலை தொழுகை என்று அழைக்குமளவுக்கு முக்கியமாக மேலை நாட்டவர் கருதுகின்றனர். காலை சிறிது நேரம் உடற்பயிற்சி, சுய முன்னேற்ற பயிற்சி, யோகா மற்றும் நல்ல காலை உணவு போன்றவை நமக்கு அந்த நாளை சந்திப்பதற்கான ஆயத்த பயிற்சியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஊக்கமே எல்லாம்
நமக்கு கிடைத்திருக்கும் 24 மணி நேரத்தை கூட்டவோ குறைக்கவோ முடியாது என்றாலும் குடுக்கப்பட்ட நேரத்தை கவனமாக ஊக்கத்துடன் செயல்களை செய்துமுடிக்க விளைந்தால் குறைவான நேரத்தில் அதிகமான வேலைகளை செய்துமுடிக்க இயலும். இதையேதான் வள்ளுவர் அசைவில்லா ஊக்கம் வேண்டும் என்றார்.
வாழ்த்துக்கள்
இவைகளை முயற்சித்துப்பார்க்க நீங்கள் தொழிலதிபரோ அல்லது ஒலிம்பிக் போட்டியாளரோவாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் தொழிலோ, வேலையிலோ அல்லது படிப்பிலோ மேல் சொன்ன சிலவற்றை முயற்சித்துப்பாருங்கள். வெற்றி வசப்படும்.
No comments:
Post a Comment