டேர் ஃபிலனாகன் எனும் சிறுவன் அரிதான ஒரு மூளை குறைபாட்டுடன் பிறந்தவன். இவனது மண்டை ஓடு மூளையை நசுக்கிக் கொண்டிருந்தது. இப்போது அச்சிறுவனின் வயது 6. இந்நிலைக்கு அல்பெர்ட் சின்ரோம் என்று பெயர். இது 150000ல் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய விநோதமான ஒன்று. மற்ற குழந்தைகளில் உள்ள மிருதுவான, மூளை வளரும்போது கூடவே விரிவடையும் தன்மை கொண்ட மண்டை ஓடு போல் இல்லாமல் டேரின் மண்டை ஓடும் மூளையும் ஒன்றோடொன்று ஒட்டி இருந்தது. இதனால் அவனது மூளை வளரும்போது அது மண்டை ஓட்டால் நசுக்கப் பட்டது. இதனால் சில மூச்சு ப்ரச்சினைகள் உண்டானது. 2016 ல் மருத்துவர்கள் டேரின் முக எலும்பை உடைத்து உலோகத்தால் ஆன ஒரு சட்டத்தை அவனது கபாலத்தில் இணைத்தனர். இதன் நோக்கம் அவனது முகத்தை முன் பக்கமாக இழுத்து செயற்கை சுவாசத்தை தவிர்த்து இயற்கையாக சுவாசிக்க வைப்பதே.
இத்தனை தடைகள் இருந்த போதிலும் டேர் மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டமான சிறுவன். மருத்துவர்கள் இறுதியாக அவனால் செயற்கை கருவிகள் இல்லாமல் இனி தானாகவே சுவாசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவனின் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியான எண்ணங்களையும் பார்க்கும்போது நமது பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகிறது. இந்த நம்பிக்கை தரும் கதையை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment